12 ஆவது முறையாக கொரோனா தடுப்பூசி போடச் சென்ற முதியவர்! அதிர்ந்து போன சுகாதாரத்துறை அதிகாரிகள்

பீகார் மாநிலத்தை சேர்ந்த 84 வயதான பிரம்மாதேவ் மண்டல், தற்போது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

மாதேபுரா மாவட்டத்தில் உள்ள அவுரை கிராமத்தைச் சேர்ந்த அந்த முதியவர், கடந்த 10 மாதங்களில் பல்வேறு இடங்களில் 11 முறை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே 11 முறை தடுப்பூசியைப் பெற்றதாக பிரம்மாதேவ் கூறுகிறார். தடுப்பூசி போட்டதில் இருந்து முழங்கால் வலி பிரச்சனை குறைந்துள்ளது என்கிறார். அதனால்தான் பல தடுப்பூசிகளை அவர் போட்டுக் கொண்டுள்ளார்.

தபால்துறை ஊழியராக நீண்ட காலம் பணியாற்றிய பிரம்மாதேவ், 12 வது முறையை கொரோனா தடுப்பூசி போட சென்றபோது, ​​ சுகாதாரத்துறை பணியாளர்களால் அடையாளம் காணப்பட்டார். இதன் விளைவாக அவர் 11 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டது அம்பலமானது.

தொலைபேசி எண்களை மாற்றி மாற்றிக் கொடுத்து தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, மருத்துவ அதிகாரி டொக்டர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.

தமது அடையாள அட்டையை மாற்றி தடுப்பூசியை பலமுறை போட்டுக் கொள்வது சட்டத்திற்கு எதிரானது என மருத்துவமனை தலைமை மருத்துவர் அமரேந்திர நாராயண் ஷாஹி கூறியுள்ளார். பிரம்மதேவ் மண்டல் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts