20,000 கி.மீ. தூர பயணத்தை நிறைவுசெய்து மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய பறவை

புலம்பெயரும் பறவைகள் தொடர்பான ஆய்வொன்றில், இலங்கைக்கு உரித்தான பறவையொன்று 19,360 கிலோமீற்றர் தூரம் பறந்து சென்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஐரோப்பா, ஆர்க்டிக் வரையில் வடக்கு நோக்கிப் புலம்பெயர்ந்த குறித்த பறவை சுமார் 20,000 கிலோமீற்றர் தூரம் பயணத்தை நிறைவு செய்து மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளது.

‘மெனிகே’ என்று பெயரிடப்பட்டுள்ள Heuglin’s gull என்ற இந்தப் பறவை, கடந்த ஏப்ரல் மாதம் தலை மன்னாரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.
தலைமன்னாரிலிருந்து ஜீ.பி.எஸ் பொருத்தப்பட்ட ‘மேக’ மற்றும் ‘மெனிக்கே’ என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு Heuglin’s gull இனப் பறவைகள் விடுவிக்கப்பட்டன.

அவற்றில் மேக உடனேயே வடக்கு நோக்கி இடம்பெயர்வைத் தொடங்கியது, மெனிகே 20 நாட்களுக்கு மன்னாரில் தங்கியிருந்து ஏப்ரல் பிற்பகுதியில் மன்னாரை விட்டு வெளியேறியது.
இலங்கையை விட்டு வெளியேறி ஆறு மாதங்கள், ஒன்பது நாட்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் 4 ஆம் திகதி மெனிகே மன்னாருக்குத் திரும்பியது.

மெனிக்கே மன்னாரிலிருந்து ஆர்க்டிக் வரை சென்று மீண்டும் மன்னார் வரையான தனது முழுப் பயணத்தின் போது 19,360 கிலோமீற்றர் தூரத்தை வியக்கத் தக்க வகையில் கடந்துள்ளது.

தெற்கு திசை நோக்கி இடம்பெயரும் ‘மேக’ இறுதிக் கட்டத்தில் இருக்கிறது, அது விரைவில் நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Heuglin’s gull என்பது இலங்கையின் வடமேற்கு மற்றும் வடக்கு கரையோரப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஓர் அழகான, புலம்பெயர் பறவையாகும்.

இந்த ஆய்வை மேற்கொள்ளும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் களப் பறவையியல் ஆய்வு வட்டத்தின் ஆய்வுக் குழுவில் பேராசிரியர் சம்பத் செனவிரத்ன (முதன்மை ஆய்வாளர்), பேராசிரியர் சரத் கொடகம மற்றும் கலாநிதி கயோமினி பனாகொட ஆகியோர் அடங்குகின்றனர்.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை கடற்படை ஆகியவை இந்த ஆராய்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

copy_to_facebook

Latest Posts

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

விடுமுறை வழங்கவில்லை!! யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு!!
Related Posts