30,000 ரூபா வட்டிப்பணம் குட்டி போட்டதால் மகளை வேலைக்கு அனுப்பினேன்; தீப்பற்றிய மகளின் மேல் ரிஷாத் மேடத்தின் அப்பா கம்பளத்தை போர்த்தார்’: இஷாலினியின் தாய் சொன்னவை!

வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் மகளை வேலைக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார் சிறுமி இஷாலினியின் தாயார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு வீட்டில் பணிபுரிந்து உயிரிழந்த சிறுமி  இஷாலினி ஜூட் குமாரி மற்றும் சிறுமி பணிப்பெண்ணாக செல்ல வேண்டிய நிலைமை குறித்து, சிறுமியின் தாய், தந்தையர் தெரிவித்த கருத்துக்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

தவலாக்கலை, டயகம மேற்கில் வசிக்கும் ஜெயராஜ் ஜூட் குமார்- ராஜமணிக்கம் ரஞ்சனியின் மூன்றாவது மகள் இஷாலினி.

அந்த தம்பதியினருக்கு 6 பிள்ளைகள்.

மூத்த மகன் பிரசாத்திற்கு 21 வயது, இரண்டாவது மகள் விதுனிஷாவிற்கு 19 வயது,
மூன்றாவது மகள் இஷாலினி இறக்கும் போது 16 வயது, நான்காவது ஜானித்சரின், 13 வயது;
ஐந்தாவது ஜூலித் சேத்ரின் 07 வயது , ஆறாவது பிள்ளைக்கு 2 வயது.

இசாலினி 7 வயது வரை அவிசாவளையில், சி. சி. தமிழ் மகா வித்யாலயத்தில் கல்வி கற்றார்.

“கொரோனா வருவதற்கு முன்பு, என் கணவரும் எனது மகனும் கொழும்பில் வேலை செய்தனர். கொரோனாவினால் நாடுமூடப்பட்டதும், என் கணவரும் மகனும் வேலையிழந்து டயகம வீட்டிற்கு வந்தார்கள். நாங்கள் மிகவும் கடினமான காலத்தில் வாழ்கிறோம்“ என தாயார் தெரிவித்தார்.

“பணமில்லாததால் எஸ்டேட்டில் வட்டிக்கு பணம் கொடுப்பவரிடமிருந்து ரூ .30,000 பெற்றோம். அந்த பணத்த குறிப்பிட்ட தவணையில் செலுத்த முடியவில்லை. இது  ரூ .80,000 ஆக உயர்ந்து விட்டது. பணத்தை கொடுக்க முடியாத நிலையில், வட்டிக்காரர் தினமும் வீட்டின் முன் வந்து கத்த ஆரம்பித்தார்.

இதன்போதுதான், சங்கர் (தரகர்), அந்த மனிதனுடன் என்ன பிரச்சனையென என்னிடம் கேட்டார். வட்டிக்கு கொஞ்சம் பணம் வாங்கி அதை கொடுக்க முடியாமலுள்ளதை கூறினேன்.

இஷாலியினி பணிப்பெண்ணாக செல்வதற்கு ஒரு வாரம் முன்னர், பொருளொன்றை பெற்றுக்கொண்டு 30,000 ரூபா பணத்தை சங்கர் தந்தார்.

எங்காவது வேலை தேடித் தருமாறு அவரிடம் கேட்டேன். ரிஷாத் பதியுதீனின்வீட்டில் தனது மகள் 4 வருடங்களாக பணியாற்றியதாகவும், அது மிக நல்ல இடமென்றும் கூறினார். அங்கு வேலை பெற்றுத்தருவதாக கூறினார்.

ரிஷாத் வீட்டுக்கு நான் பணிப்பெண்ணாக செல்ல முடியாது, எனக்கு சிறிய குழந்தையுள்ளதால் பராமரிக்க வேண்டும் என்றார். மூத்த மகள்களில் ஒருவரை அனுப்பும்படி கூறினார். மூத்த மகள் அதை விரும்பவில்லை. இசாலினி பணிப்பெண்ணாக செல்ல விரும்பினார். ஆனால், நானும் கணவரும் அதை விரும்பவில்லை.

தான் பணிப்பெண்ணாக செல்வதாகவும், சம்பள பணத்தின் மூலம் கடனை அடைத்து, வீட்டுக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்குமாறு இஷாலினி கூறினார்.

தனது மகள் ரிஷாத் வீட்டிலிருந்து வெளியேறி விட்டதாக கூறி, இஷாலினியை சங்கர் அழைத்து சென்றார். கொரோனா காரணமாக இஷாலினியுடன் யாரும் செல்ல முடியாது, ஒவ்வொரு மாத சம்பளத்தையும் பெற்றுத்தருவேன் என்றார்.

மகள் சென்று ஒரு வாரத்திற்குள் தொலைபேசியில் பேசினாள். அந்த வீட்டில் ஒரு தம்பி வேலை செய்கிறான். அவர் தனது தொலைபேசியிலிருந்து அழைத்தார். சனிக்கிழமைகளில் 7.00 முதல் 8.00 மணிக்கிடையில் சுமார் 5 நிமிடங்கள் பேசுவோம். நாங்கள் முதலில் பேசிய அன்று, வேலையிடம் எப்படி என்று கேட்டோம். எந்த குழப்பமும் இல்லை என்று மகள் சொன்னாள்.

தரகர் சங்கர் 10-15 நாட்களிற்கு முன் என்னுடன் பேசினார். மேடம் (ரிஷாத்தின் மனைவி) என்னை தொலைபேசியில் பேசும்படி கூறியதாக சொன்னார்.

நான் அந்த தம்பியின் தொலைபேசிக்கு அழைத்தேன்.தன்னால் அந்த வீட்டில் இனியும் வேலை செய்ய முடியாது, தன்னை அழைத்து செல்லுங்கள் என மகள் கூறினாள். ஏன் என்று கேட்டேன். அங்கு வேலை செய்யும் இளைஞன் தன்னை விளக்குமாறினால் அடிப்பதாக சொன்னார்.

அமைச்சரின் உறவினர் ஒருவரால் மகளுக்கு அன்பளிப்பாக ரூ. 5000 வழங்கப்பட்டிருந்தது.
எனது மகள் அந்த வீட்டிலிருந்து 5,000 ரூபா திருடியதாக அந்த தம்பி கூறினார்.

என் பேச்சை மேடத்தின் தாய், துப்பரவு செய்பவர் உள்ளிட்டவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை உணர்ந்தேன்.

பின்னர், துப்பரவில் ஈடுபடுபவர் மகளிடமிருந்து தொலைபேசிய பறித்து, மேடம் என் மகளை அறைந்ததாகவும், அவரை எனது மகள் எதிர்த்து பேசியதாகவும், அவரை எப்படி எதிர்த்து பேசலாமென மகளிடம் கேளுங்கள் என்றும் சொன்னார்.

அப்போது மேடம், மகள் வேலை செய்வதில்லையென்றார்.

நான் 21 ஆம் திகதி அ்ந்த வீட்டுக்கு வேலைக்கு வருவேன், அதுவைரை பொறுத்துக் கொள்ளும்படி சொன்னேன். ஆனால் லொக் டவுனால் என்னால் செல்ல முடியவில்லை.
பின்னர் நான் 27 ஆம் திகதி வெளியேற முயற்சித்தேன்.ஆனால் முடியவில்லை.
பின்னர் ஜூலை 7 ஆம் திகதி நான் கொழும்புக்குச் செல்வேன் என்று சொன்னேன்.

மகளுக்கு ரூ. 25,000 சம்பளம். தற்போது ரூ.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேடமின் தாய் என் மகளுக்கு அணிய 3 ஆடைகளை கொடுத்திருந்தார்.

இந்த சம்பவம் 3 ஆம் திகதி காலை 6.40 மணியளவில் நடந்தது. அன்று காலை 7.00 மணியளவில் மேடம், சங்கருக்கு தகவல் சொல்லியுள்ளார். ஆனால் அண்ணன் சங்கர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. மாலை 3.00 மணியளவில் பொரளை போலீஸார் அழைத்து எங்கள் மகளின் பெயரைக் கேட்டனர்.

அவர்கள் எம்மை விரைவில் வரச் சொன்னார்கள். பின்னர் நான் சங்கர் அய்யாவுடன் பேசியபோது, நாங்கள் ஒரு வேனை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்வோம், மேடம் வேனுக்கு பணம் செலுத்துகிறார் என்றார்.

மகன் அவிசாவளையில் வேலை செய்து கொண்டிருந்தார். நானும், கணவரும், அவரும் கொழும்பு சென்றோம். நேரமாக மேடத்திடமே சென்றோம்.

நடந்த சம்பவத்தை அவர் எமக்கு சொன்னார்.

சம்பவம் நடந்த போது மகள் சில்க் ஆடையொன்று அணிந்திருந்தாள். மேடம் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். மகள் தீ வைத்த பின் கத்திய சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்தார். அந்த நேரத்தில், மகள் தீப்பிடித்த நிலையில்,வீட்டுக்குள் ஓடி வந்தள்.
மேடமின் தந்தை ஒரு கம்பளத்தை எடுத்து மகளின் உடலில் வைத்து தீயை அணைத்தார்.
அப்போது அவள் வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியில் இறங்கி ஐஸ் தண்ணீர் கேட்டதாகக் கூறினார். மேடம் உடனடியாக அம்யூலன்ஸிற்கு அறிவித்தார். அம்யூலன்ஸ் வந்ததும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.

மருத்துவமனையில் என் மகள் போலீசாருடன் பேசியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​மருத்துவமனையில் இருந்தவர்கள் என்னிடம் சொன்னார்கள், மகள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அரை மணி நேரத்திற்குள் இயந்திரத்தில் வைக்கப்பட்டதாக. என்ன நடந்தது என்று எனக்கு புரியவில்லை. என் மகள் தீ மற்றும் சிறிய சத்தங்களிற்கு பயப்படுபவள். அவளுக்கு என்ன ஆனது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இது ஒரு கனவு போன்றது என்றார்.

“கொழும்பு பொலிசார் வந்து என் மகள் மற்றும் என் மூத்த மகள் பற்றி எங்களிடம் நிறைய கேட்கிறார்கள். இங்குள்ள எங்கள் மகளுக்கு ஏதாவது நடந்ததா என்று அவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள். கொழும்பில் எங்கள் மகளிற்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றே நாம் கேட்கிறோம்.

ஏனென்றால் நீதியும் நியாயமும் எங்களுக்கு வேண்டும். என் மகள் வறுமை காரணமாக இந்த துரதிர்ஷ்டவசமான விதியை அனுபவித்தாள். அதனால்தான் என் மகளை வேலைக்கு அனுப்பினேன். என் மகளுக்கு ஏற்பட்ட கஷ்டம் வேறு எந்த ஏழைக் குழந்தைக்கும் ஏற்படக் கூடாது என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்“ என்றார்.




Latest Posts

கனடாவில் 29 வயது இளம் தமிழ்க் குடும்பஸ்தர் அகாலமரணம்!! (Photos)

சீனாவால் பேராபத்து! ஒரு கையெழுத்தில் இலங்கையின் எதிர்காலம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிக்கப்பட்டது!

ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி நடவடிக்கை – கலக்கத்தில் உயர்மட்ட அதிகாரிகள்

யாழில் மாணவர் வரவு குறைவு!

சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!

ஒரு பெண்ணும் பெண்ணும் காதலிக்க அது போதும்! மற்றது எதுவும் தேவையில்லையாம்! மனம் திறக்கும் இளசுகள்! அப்படியானால் மற்ற விஷயங்கள்?

கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து கொண்டு உயிரிழந்த 16 வயது மாணவி!!

கோட்டாபயவின் தலையீட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஹெலிய?

தாயை கொன்று சமைத்து உண்ட மகன்! மீதியை ப்ரிட்ஜில் வைத்த அவலம்!

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்

காதலர்களே நீங்கள் இப்படி வழிபட்டால் உங்க காதல் நிச்சயம் நிறைவேறும்..!

மனைவியை தொழிலதிபருக்கு விற்று ஆப்பிள் ஐ போன் வாங்கிய கணவன்!!

இலங்கை வருகிறார் அதானி! இனி இயற்கை வளங்களுக்கு சனி!

இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா – பகிரங்க எச்சரிக்கை

யாழில் இளம் குடும்ப பெண்மீது கத்திக்குத்து; கணவன் தலைமறைவு!

யாழில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்; முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

அரசு பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் சுகாதார அமைச்சர் – அரசியலில் பரபரப்பு.

லண்டனில் தடுப்பூசி போட்ட பிரபலத்துக்கு ரத்தகட்டி! படுத்த படுக்கையான சோகம்!

யாழ்ப்பாணத்திலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

இயலாமையின் உச்சத்தில் சிறிலங்கா அரசாங்கம் – வெளிப்படையாகக் கூறிய செல்வம் அடைக்கலநாதன்

சீன தடுப்பூசி ரொம்ப நல்லது! உசுப்பேற்றும் தமிழரசு கட்சி கண்டுபிடிப்பு!

கோட்டாபயவின் நோக்கம் வெளிவந்தது

“என்ன ஆட்டம் போட்டாலும் எதுவும் முடியாது“ பகிரங்க சவால்

நவம்பர் 1 முதல் குறிப்பிட்ட போன்களில் செயலிழக்க உள்ள வாட்ஸ் அப்…காரணம் என்ன?

இலங்கையில் பேருந்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

பேஸ்புக், வட்சப் போன்ற சமூகவலைத்தள தொடர்புகள் இல்லாத மணமகளைத் தேடும் சுவிஸ்சில் வசிக்கும் யாழ்ப்பாண மாப்பிளை

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் பயனில்லை! கோட்டாபயவின் அறிவிப்பு

அரிசி மற்றும் பருப்பு விலைகளை பார்த்துக் கொள்வதற்காகவா என்னை நியமித்தீர்கள்..? ஜனாதிபதி கேள்வி..

ஒரே சூலில் 6 குழந்தைகள்: ’31 வாரங்கள் மனைவி சுமந்த சுமையை இனி நான் சுமப்பேன்’; கணவன் நெகிழ்ச்சி!

முகக்கவசம் இல்லை; 5000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் குடும்ப்ப பெண் வவுனியாவில் கடத்தப்பட்டது ஏன்?? கணவர் பொலிசாரிடம் முறையிட்டார்!!

அரிசி பருப்பு விலைகளை கவனிக்க தான் என்னை தெரிவு செய்தீர்கள் என்றால் என்னால் பயனில்லை! கோட்டாபய அறிவிப்பு

திருமண செலவு பணத்தை தானம் கொடுத்த சிங்கள தம்பதி! யாழில் நிலநடுக்கம்!

16 நாட்களில் கசந்த முகநூல் காதல்; யுவதியின் விபரீத முடிவு; தந்தை வெளியிட்ட சந்தேகம்

பெற்ற குழந்தையை புதைத்த தாய்! உயிர்த்து எழுந்து வந்த அதிசயம்!

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதி

ராஜபக்ச அரசாங்கம் சலூன் கடையைப் போன்றது

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த யாழ் JK Dreams Studio முதலாளி கஜானன் அங்கஜனின் அடியாளா?? அங்கஜன் என்ன கூறுகின்றார்?? இதோ விபரம்!!

பேஸ்புக் காதலனுடன் கலியாணம் கட்டாது ஒன்றாக இருந்த திருகோணமலை யுவதிக்கு நடந்த கதி!!

குழந்தையுடன் நடு வீதியில் இளம் பெண் உதவி செய்வீர்களா?? அதிகம் பகிர்ந்து உதவி செய்யுங்கள்!!!

கரும் பூஞ்சை இலங்கையில் முதலாவது மரணம்

பூச்செண்டுடன் பெண்ணின் சடலம்! தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்!

6 மாதங்களாக வயிற்றில் இருந்த செல்போன்! பின்னர் நடந்த சம்பவம்

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஒக்டோபர் 25 முதல் திறக்க முடிவு!

கரும் பூஞ்சை நோயினால் இலங்கையில் பதிவான முதலாவது மரணம்

பிரபாகரனின் மகன் என்னிடம் கல்வி கற்றவர்! பாராளுமன்றத்தை கதற வைத்த சிறிதரன்!

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வரும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக் காதலால் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி

கடும் நெருக்கடியில் கோட்டாபய அரசாங்கம்; பிற நாடுகளிடம் கையேந்தும் மோசமான நிலை; காரணம் என்ன ?

பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ் இளைஞனிற்கு காத்திருந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் குடும்பம்

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

கோட்டாவின் மண்டையை களுவிய விற்பன்னர்கள் தலை தெறிக்க ஓட்டம்

நீர்கொழும்பில் காணாமல்போன 2 வயது சிறுமி சிலாபத்தில் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம்!

சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணண்.

இன்றைய இராசிபலன் (26.10.2021)

கனடாவில் குரங்கின் கையில் சிக்கிய பூமாலை‘ காவாலி கையில் சிக்கிய விடுதலைப் புலிகளின் சின்னங்கள்!! (Photos)

இலங்கை முற்றாக இருளில் மூழ்கும் – 27ஆம் திகதி வெளிவரவுள்ள அறிவித்தல்!!

இரத்தக்காயங்களுடன் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!!

18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 61 வயது நபர்!

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்!! தென்னிலங்கையில் ஏற்பட்ட பரபரப்பு!!

ராஜபக்ச என்ற பரம்பரை பெயரை கேட்டாலே வீதியில் செல்பவர்கள் தாக்குவார்கள்: இறுதிக்கட்டத்தை நோக்கி கோட்டாபய அரசு







Related Posts

%d bloggers like this: