Google-ல தப்பி தவறி கூட இதெல்லாம் தேடாதீங்க! மீறினால் சிக்கல்

கூகுள் செய்வது என்பது இன்று அத்தியாவசியமான விடயமாகி விட்டது. யாரேனும் உங்களுக்கு தெரியாத ஒரு கேள்வியை கேட்டு விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனடியாக கூகுள் செய்வீர்கள், அப்படித்தானே?

இப்படியாக நமக்கு தெரியாத விஷயங்களின் பதில்களை அறிய உடனடியாக ‘கூகுளிங்’ செய்து பார்க்க நம்மில் பெரும்பாலோர் பழகிவிட்டோம்.

கூகுளில் பல ஆபத்துகளும் உள்ளன, நீங்கள் இதுபோன்ற ஆபத்துகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க விரும்பினால் எக்காரணத்தை கொண்டும் கூகுள் வழியாக இந்த விடயங்களை தேட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறீர்கள்!

ஆன்லைன் பேங்கிங் தளங்களை தேடாதீங்க

ஒருவேளை உங்கள் வங்கியின் சரியான அதிகாரப்பூர்வ URL ஆனது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை கண்டுபிடிக்க வெறுமனே உங்கள் வங்கி பெயரை டைப் செய்து ஆன்லைன் பேங்கிங் என்று தேடுவதை தவிர்க்கவும். ஏனெனில் கூகுளில் பல போலியான ஆன்லைன் பேங்கிங் வலைத்தளங்கள் உள்ளன.

பெரும்பாலான போலியான வலைத்தளங்கள் ஆனது குறிப்பிட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஆக உங்கள் பணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய உங்கள் வங்கியின் அதிகாரபூர்வமான ஆன்லைன் வங்கி போர்ட்டலின் URL ஐ கூகுளில் உள்ளிடவும்.

இல்லையெனில் ஃபிஷிங் போன்ற ஆன்லைன் திருடர்களின் கைகளில் தானாகவே போய் சிக்கிகொள்வீர்கள்.

கூகுள் வழியாக கஸ்டமர் கேர் எண்களை தேட வேண்டாம்

இது மிகவும் பிரபலமான ஆன்லைன் மோசடிகளில் ஒன்றாகும். இம்மாதிரியான மோசடிகளில் ஈடுபடுவபர்கள் போலியான வணிக பட்டியல்களையும், கஸ்டமர் கேர் எண்களையும் வலைத்தளங்களில் பதிவு செய்து வைத்திருப்பார்கள்.

அதை உண்மை என்று நம்பி அவர்களின் கையில் சிக்கும் வாடிக்கையாளர்களிடம் விலாசம் அல்லது வங்கி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் தொடங்கி பணம் பறிப்பு வரையிலான மோசடிகள் கட்டவிழ்க்கப்படும்.

ஆப்ஸ் மற்றும் சாப்ட்வேர் டவுன்லோட்டிற்காக கூகுளை அணுக வேண்டாம்!

நீங்கள் எதாவதொரு மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்ய விரும்பினால், தயவு செய்து வெறுமனே அதன் பெயரை டைப் செய்து கூகுள் வழியாக தேட வேண்டாம்.

அது Android ஆப் என்றால் Google Play-விற்கு செல்லவும் அல்லது அது ஐஓஎஸ் ஆப் என்றால் ஐபோன்களுக்கான ஆப் ஸ்டோருக்கு செல்லவும், அதாவது அந்தந்த இயங்குதளத்திற்கான அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோருக்கு செல்லவும், அங்கே குறிப்பிட்ட ஆப்ஸ்களை தேடவும்.

மாறாக வெறுமனே கூகுள் வழியாக ஆப்ஸ்களை தேடினால், மால்வேர் உள்ளடக்கத்துடன் கூடிய போலி ஆப்ஸ்களை நீங்கள் இன்ஸ்டால் செய்வதற்கான ஆயிரமாயிரம் வழிகள் ரெடியாக இருக்கும்.

மருந்துகள் அல்லது மருத்துவ அறிகுறிகளை கூகுளில் தேட வேண்டாம்!

தெளிவாக புரிந்து கொள்ளவும், கூகுள் என்பது மருந்துகளைத் தேடுவதற்கான ஒரு இடம் அல்ல. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது ஒரு நோயைப் பற்றி அறிய மருத்துவர் ஒருவரை பார்ப்பதை விட்டுவிட்டு, கூகுள் வழியாக தேடல்களை நிகழ்த்தி அதன் வழியாக கிடைக்கும் மருந்துகளையும், அதன் வழியாக கிடைக்கும் தகவல்களை உங்களுக்கானது என்று நீங்கள் ஏற்றுக்கொண்டால் (மன்னிக்கவும்) உங்களை விட பெரிய முட்டாள் யாருமில்லை.

மஞ்சள் தூளை பாலில் போட்டு குடித்தால் பறந்து போகும் சாதாரணமான சளிப்பிரச்சனையை கூட கேன்சர் என்று கூகுள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக எக்காரணத்தை கொண்டும் கூகுளில் நோய் சார்ந்த விடயங்களை பற்றி தேட வேண்டாம், தேடிப்பிடித்தாலும் அதை உண்மையென நம்பவும் வேண்டாம். குறிப்பாக நீங்கள் கண்டறிந்த தகவல்களின் அடிப்படையில் மருந்துகளை வாங்க வேண்டாம்.

கூகுள் வழியாக ஆபாசமாக எதையும் தேட வேண்டாம்!

கூகுள் விளம்பரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அறியாதவர்களுக்கு, கூகுளில் நீங்கள் தேடிய விடயங்கள் ஆனது, பிற்காலத்தில் நீங்கள் பார்வையிடும் மற்ற வலைத்தளங்களில் விளம்பரமாக காட்சிப்படும்.

அதாவது உங்கள் கூகுள் தேடல் வரலாற்றின் அடிப்படையின்கீழ் உங்களுக்கான விளம்பரங்கள் ஆனது பரிந்துரைக்கபப்டும் என்று அர்த்தம்.

ஆக நீங்கள் அலுவலகத்தில் இருக்கும் போது அல்லது குடும்பத்தினரின் முன்னால் இருக்கும் போது உங்களின் “ஆபாச தேடல்”களானது விளம்பரமாக எழாமல் இருக்க வேண்டும் என்றால், கூகுள் வழியாக ஆபாசமாக எதையும் தேடாதீர்கள்.
Latest Posts

அரச நிறுவனங்கள், பொது இடங்களுக்குச் செல்வோருக்கு கோவிட்-19 தடுப்பூசி அட்டை அவசியம் – எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானம்

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் மீண்டும் கடமைக்கு அழைக்க ஜனாதிபதி செயலாளர் உத்தரவு

புற்று நோயால் திடீரென இறந்த ஒரு பிள்ளையின் தந்தையான இள வயது ஆசிரியர்

ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்! (படங்கள்)

15 வயதுச் சிங்களச்சிறுமியின் உடல் உறவுக் காட்சியை இணையத்தளத்தில் பார்வையிட 5 நிமிடத்திற்கு 5 ஆயிரம் ரூபா!! நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு இது!!

வடமாகாண அமைச்சு வாகனத்தை கொழும்பிலிருந்து உறவினர்களை அழைத்துவர பயன்படுத்திய அதிகாரி!

10 பேருக்கு கொரோனா! இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு

வெள்ளவத்தையில் தொடர்மாடி குடியிருப்பில் வெளிநாட்டு பெண் தற்கொலை!

யாழில் பெண்கள் சிலரின் மோசமான செயல்; பிறந்த நாளில் இளைஞர் விபரீத முடிவு!

மீண்டும் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு? வெளியான தகவல்

புறா சண்டை!! கொரோனா தொற்றுடன் பெண்கள் ஆடிய பேயாட்டம்!!

விவாகரத்தான பெண் மீது காதல்; ஏற்க மறுத்ததால் யாழ் இளைஞன் செய்த செயல்

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவுக்கு விற்பனை? வெளியானது மற்றுமொரு தகவல்

வடக்கில் நாளை முதல் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி

‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’

அரச ஊழியர்கள் இனி சீதனம் வாங்க முடியாது: புதிய சட்டம்!

சுகாதாரப் பரிசோதகரின் விளையாட்டு கண்ணீருடன் யுவதி!

விவாகரத்து செய்த மனைவியை பார்க்க வந்த முன்னாள் கணவர்: பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்!!

அடுப்படியில் பெற்றோலை வைத்த கணவன்; அறியாமல் அடுப்பை மூட்டிய இளம் பெண் எரிந்து மரணம்: யாழில் துயரம்!

யாழிலிருந்து தொழில் தேடி கொழும்பிற்கு சென்ற சிறுவனிற்கு ஏற்பட்ட கதி: வீதியோரங்களில் தூங்கும் அவலம்!

வடக்கிற்கு இன்று கிடைத்த தடுப்பூசிகள் 29ம் திகதி முதல் செலுத்தல்!

போலி நோட்டுகளுடன் கடைக்குச் சென்றவரின் பையில் போலி நோட்டுக்களை அச்சிட பயன்படுத்திய இயந்திரம்! வெல்லம்பிட்டி நபர் கைது!

ஹிஷாலினிக்கு பதிலான சிங்கள பெயரை வழங்கிய ரிஷாட்டின் மாமனார் – செயலிழந்த CCTV கமராக்கள் – நீதிமன்றில் வெளியாகிய பரபரப்பு மிக்க தகவல்கள்

சம்பவம் நடக்க முதல் செயலிழந்த சிசிடீவிகள்; பல மர்மங்கள் நீதிமன்றில் வெளிப்படுத்தல்!

மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சவால்! மஞ்சள் நிறமாக மாறிய சிறுவனின் நாக்கு

திருமணமான 10 மாதத்தில் கிணற்றிற்குள் சடலங்களாக மிதக்கும் இளம் ஜோடி

இன்றைய ராசிபலன் – 27/07/2021

மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

இலங்கை சாதனையை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு.

காதலியை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! பெண் வீட்டார் செய்த திட்டமிட்ட சம்பவம்..!!!

கொவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்.தாதியர் பயிற்சி கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட 64 பேர் ; அனைவருமே 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களாம்

யாழில் மதுபோதையில் பொலிஸார் அட்டகாசம்; இளைஞனை கடத்தி சித்திரவதை!

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டொலர்கள் பரிசு:எங்கு தெரியுமா?

தீராத பண கஷ்டங்களை நீக்க இதை செய்யுங்கள் !

பிரபல நடிகரால் 3 முறை கர்ப்பமான முன்னணி நடிகை ? யார் தெரியுமா? அதிர்ச்சியில் திரையுலகம்!

நயன்தாரா செய்தது நியாயமா, கேட்க தைரியம் இருக்கா?- மீண்டும் வம்பிழுக்கும் வனிதாRelated Posts

%d bloggers like this: